
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு 16 வயது சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலிருந்துள்ளார். இந்த சிறுமி தற்போது கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். இந்த சிறுமி கடந்த சில நாட்களாக மிகுந்த சோர்வுடன் காணப்பட்ட நிலையில் வயிற்று வலியாலும் அவதிப்பட்டார்.
இதனால் சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு கர்ப்பமாக இருப்பதாக கூறினார்கள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது சம்பவ நாளில் சக மாணவன் ஒருவனது வீட்டிற்கு நோட்டு புத்தகங்களை கொடுப்பதற்காக சிறுமி சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுவன் திருமண ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தற்போது தலைமறைவாக உள்ள சிறுவனை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.