
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கலாபதர் கிராமத்தில் ராம் அகிர்வால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் அகர்வால் என்ற நண்பர் உள்ளார். இந்த நிலையில் நண்பர்களுக்கிடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தினேஷ் தான் கொடுத்த ஐம்பது ரூபாய் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இது தொடர்பாக தினேஷுக்கும் ராமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த ராம் நைசாக பேசி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தினேஷை அழைத்துச் சென்று தகராறு செய்துள்ளார். மேலும் கோபத்தில் தினேஷை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தினேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.