இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற நிலையில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் மற்றும் திமுக அமைச்சர்கள், இந்திய முப்படைகளின் தளபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்ட நிலையில் விமான சாகச நிகழ்ச்சி நிகழ்ச்சியின் போது அதிகமான வெயில் நிலவியதால் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அதோடு ஏராளமானோர் அதிக வெயிலின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் தற்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுவதற்கான நேரத்தை தேர்வு செய்தது இந்திய விமான படை தான். அதிக வெயில் காரணமாக 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சாகச நிகழ்ச்சிக்கு விமானப்படை கேட்டு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெயில் காரணமாக உயிரிழந்தவர்களை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.