தேவையில்லாமல் எங்களை யாரும் டச் பண்ண வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்திற்கு 2.5 லட்சம் கோடி ரூபாயை கடனாக ஏற்படுத்திவிட்டு அரசுக்கு வரவேண்டிய வருவாய் திமுகவினர் ஒவ்வொருவரும் சொத்து சேர்த்து வைத்துள்ளனர். நாங்கள் தெளிந்த நீரோடையாகவும் சிறந்த புத்தகமாகவும் இருக்கிறோம். எங்கள் அனைவருடைய சொத்து பட்டியலும் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம்.

தேவை இல்லாமல் எங்களை யாரும் டச் பண்ண வேண்டாம். அது நெருப்போடு விளையாடுவது போன்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி குறித்த அண்ணாமலை முடிவு செய்ய முடியாது. மத்திய குழு தான் முடிவு செய்யும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் எங்களிடம் கூடுதல் சொத்து இருந்தால் பறிமுதல் செய்து கொள்ளுங்கள் எனவும் எந்த பயமும் இல்லை தைரியமாக சொல்கிறேன் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.