உக்ரைனுடன் சமாதான ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சிகளை ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தடுக்கிறார் என்று கூறி, அமெரிக்க  அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். “நான் இல்லையென்றால், ரஷியாவுக்கு ஏற்கனவே மிகவும் மோசமான விஷயங்கள் நடந்திருக்குமே என்பதை புதின் புரிந்துகொள்ளவில்லை. அவர் நெருப்புடன் விளையாடுகிறார்!” என்று டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு தொடங்கிய ரஷியா – உக்ரைன் போர் தொடர்ந்து வன்முறையாக நீடித்து வருகிறது. தனது அதிபர்பதவிக்காலத்திலேயே இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

அந்த நோக்கத்தில் இரு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், முடிவான சமாதான ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இருப்பினும், அதனால் அவர் மீது விமர்சனம் எழுந்துவருகிறது.

இந்தத் திட்டவட்டமான விமர்சனத்திற்கு பின்புலமாக, ரஷியா கடந்த சனிக்கிழமை கீவ் நகரை குறிவைத்து மேற்கொண்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் தான் காரணம். இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாகவும், பெரும் பொருட்சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் உக்ரைன் மற்றும் உலகளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, டிரம்ப் மிக கடுமையான சொற்களில் புதினை விமர்சித்து வருகிறார்.  இந்தச் சூழலில், உடனடியாக அமைதிக்கான முயற்சிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற நெருக்கடியான தேவை எழுந்துள்ளது.