சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு எடுத்தனர். இதற்காக குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு சென்று விட்டு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குமார் என்பவர் தூங்கிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த சிறுமி கத்தி கூச்சலிட்டதால் சக பயணிகள் அவரை பிடித்து ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.