பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல் சோர்வாக இருப்பதை உணர்ந்ததால் மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்பட்ட சோர்வு காரணமாக அவர் மருத்துவர்களை சந்தித்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டார். இதுகுறித்து அவருடைய மகன் ஏ.ஆர். அமீன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த தகவலில், தந்தை தற்போது நலமாக இருப்பதாகவும், ரசிகர்கள் மற்றும் நலம்விரும்பிகளின் பிரார்த்தனைகளுக்கு நன்றி என பதிவிட்டிருந்தார்.

மேலும் “அப்பாவுக்கு நீர்ச்சத்து குறைவால் சோர்வாக இருப்பது உணரப்பட்டதால் மருத்துவமனைக்குச் சென்றோம். சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அவர் நலமாக உள்ளார். உங்கள் அனைவரின் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆசிர்வாதங்கள் அவருடைய உடல்நலனை மேலும் தேற்றின. உங்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் வெளியானதும், ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகர்கள் அவருக்கு விரைவில் முழுமையான உடல் நலம் திரும்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.