வான்வெளியில் ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள் ஏராளம். அந்த வகையில் பூமியிலிருந்து 15,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நெக்லெஸ் நெபுலா கிரகத்தில் தோன்றிய அசாதாரண நிகழ்வை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். ஒரு சிறிய பிரகாசமான பச்சை வாயு மண்டலம் ஒளிரும் அண்ட பொருள்களின் வளையத்தால் சூழப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட விஞ்ஞானிகள், ஹப்புள் ஸ்பேஸ் தொலைநோக்கி மூலம் இதனை படம் பிடித்ததாக தெரிவித்தனர்.