கோரக்க்பூர் மாவட்டத்தின் கோலா பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒ 10ம் வகுப்பு மாணவன் ஒருவரை கடத்தி, அவரை அடித்து தாக்கி, தேர்வுக்கு செல்ல முடியாமல் செய்துவிட முயற்சி செய்துள்ளனர். குற்றவாளிகள் பழைய  பகைமையின் காரணமாக இந்த செயலையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மாணவன் தேர்வில் பங்கேற்க முடியாதபடி தடுக்கும் நோக்கத்தோடு இந்த கடத்தல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் மாணவனின் குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் தந்தை இது பற்றி கூறும்போது, என் மகனின் முழு ஆண்டு வீணாகிவிட்டது. தேர்வு எழுத முடியாததால் அவருடைய கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்று வேதனையுடன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு, குற்றவாளிகள் மூவரை கைது செய்துள்ளனர். அதன்படி கிருஷ்ண யாதவ், ராம்புவால் நிஷாத், ரமேஷ்வர் நிஷாத் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணி குறித் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.