நகைச்சுவை செய்து மக்களை சிரிக்க வைப்பது என்பது ஒரு கலை. அந்த கலையை செய்து மக்களை சிரிக்க வைத்தவர் தான் வடிவேலு. மற்றவர்களுக்கு கிண்டல் செய்வது, டபுள் மீனிங் பேசி சிரிக்க வைப்பது போன்ற செய்யாமல் தன்னுடைய காமெடியால் தன்னை கலாய்த்து கொண்டு நடிப்பார். தற்போது இவர் கேங்கர்ஸ், மாரீசன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் கிழக்கு சீமையிலே படத்தில் நடிப்பதற்காக இவர் அதிக சம்பளம் கேட்டு முரண்டு பிடித்ததால்  இயக்குனர் பாரதிராஜா வடிவேலுவை விரட்டி விட்டதாக தயாரிப்பாளர் ஒருவர் கூறிய விஷயம் வைரலாகி வருகிறது.

வடிவேலு சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்று கிழக்கு சீமையிலே. இதனை கலைபுலி எஸ் தாணு தயாரித்திருந்தார். இந்த படத்தில் நடிக்க 25 ஆயிரம் சம்பளம் வேண்டும் என்று வடிவேலு கேட்டாராம். இதனால் கடுப்பான பாரதிராஜா நீ நடிக்கவே வேண்டாம் என்று விரட்டியுள்ளார். இதனை அடுத்து இதை பார்த்த தயாரிப்பாளர் தானு வடிவேலுவை கூப்பிட அவர் கேட்ட 25 ஆயிரம் சம்பளத்தை கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.