துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் திரைப்படம் பைசன். இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாறு வைத்து எடுத்துள்ளார் மாரி செல்வராஜ். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட்
இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள பதிவில்,” நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்குத் தெரியும். ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும்… வந்து சேர்ந்தால் என்ன செய்வேன் என்று உனக்கு தெரியும்… ஆதலால் நீ கதவுகளை அடைக்கிறாய்… நான் முட்டி மோதி மூர்க்கமாய் உடைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.