தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு காரணமாக தற்போது வரை 21 மாணவ மாணவிகள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 50 லட்சம் கையெழுத்து பெரும் இயக்கம் தற்போது நடைபெற்று வருகிறது.

இதுவரை 16 லட்சம் நேரடி கையெழுத்துக்கள் மற்றும் 11 லட்சம் கையெழுத்துக்கள் போஸ்ட் கார்டு மூலம் பெறப்பட்டுள்ளன. வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதிக்குள் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறுவது உறுதி. நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது தான் இந்த போராட்டத்திற்கான வெற்றி. நீட் தேர்வுக்கு எதிராக திமுக உண்மையான குரல் கொடுத்து வருவதாகவும் இது ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் பிரச்சனை எனவும் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.