தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியும் நடிகருமான தாடி பாலாஜி தற்போது புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனாவை விளாசி வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் தாடி பாலாஜி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில் அவரது நெஞ்சில் நடிகர் விஜய்யின் புகைப்படத்தை பச்சை குத்திக்கொண்டார். ஆனால் அவருக்கு தமிழக வெற்றி கழகத்தில் இதுவரையில் எந்தவிதமான பதவியும் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா எடப்பாடி பழனிச்சாமியை ஒருமையில் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அண்ணாமலையாவது 10 பேரை வச்சிக்கிட்டு 18 சதவீதம் வாக்கு வாங்கியுள்ளார். ஆனால் எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வர மாட்டார் என்று ஒருமையில் பேச அதனை புஸ்ஸி ஆனந்த் அருகில் இருந்து கேட்கிறார்.

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் தற்போது தாடி பாலாஜி இதனை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேசியதாவது, மேடையில் மட்டும் ஆதவ் அர்ஜுனா  மரியாதையை பற்றி ஒரு கிளாஸ் எடுப்பார். ஆனால் வயதில் மூத்தவரான எடப்பாடி பழனிச்சாமியை அவர் ஒருமையில் பேசி இருக்கிறார்.

இதனை பக்கத்தில் இருந்து கேட்ட புஸ்ஸி ஆனந்த் அதனை தடுத்திருக்க வேண்டாமா.? ஆதவ் அர்ஜுனா அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தன்னுடைய வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்தின் மூலம் பணியாற்றியுள்ள நிலையில் நீங்கள் ஒருமையில் இப்படி எடப்பாடி பழனிச்சாமியை பற்றி பேசலாமா.?

இன்னும் ஒரு கட்சி களத்திற்கே வராத நிலையில் 10 மாதங்கள் மட்டும்தான் தேர்தலுக்கு இருக்கிறது. அப்படி இருக்கும்போது நீங்கள் இப்படி பேசினால் அது கட்சி தலைமைக்கும் தலைவருக்கும் அவ பெயரை ஏற்படுத்தும். என்னமோ நீங்க பெருசா சாதிச்ச மாதிரி மத்தவங்களை விமர்சிக்கிறதும் கமெண்ட் பண்றதும் இதெல்லாம் ரொம்ப தப்பு.

மேலும் கண்டிப்பாக எனக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்தும் என்னுடைய தலைவரும் நண்பருமான விஜய்யிடம் இருந்து ஒரு நாள் அழைப்பு வரும். அப்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை என்னை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்