தமிழக ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் எண்ணெய் விலை மிக குறைவு என்பதால் அனைத்து தரப்பு மக்களும் இதனை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இது குறித்து தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளன. இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது என்பதை பலரும் அறியவில்லை. அதாவது கண் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து தெளிவான பார்வையை இது உண்டாக்குகிறது.

இதில் இயற்கையாக வைட்டமின் இ நிரம்பியுள்ளதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களையும் தடுக்கிறது. மறுபுறம் இதில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளதால் உடல் எடை வெகுவாக அதிகரிக்கும். அதனால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. பாமாயில் சுத்திகரித்து பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும். இதனை நன்றாக சூடு படுத்தி அதனை குளிர்த்து காற்று புகாத பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தினால் இதில் உள்ள சத்துக்கள் எதுவும் வீணாகாது. எனவே பாமாயில் குறித்து பரவும் வீண் செய்திகளை நம்பாமல் இதில் உள்ள சத்துக்களை பெற்று பயனடையுங்கள்.