தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு இருவரும் சேர்ந்து மனம் ஒத்து பிரிவதாக தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட பிரிவிற்கு பின், படங்களில் நடிப்பதில் அதிக கவனத்தை செலுத்தி வந்தார். இதன்பின் நடிகை சமந்தா திடீரென மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார்.

மேலும் அவர் தென் கொரியாவுக்கு மேல் சிகிச்சைக்காக செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகிய நிலையில், வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே  போராடிக் கொண்டிருக்கிறேன் என்றும் இருந்தாலும் மனம் தளரமாட்டேன் என்றும் உணர்ச்சி வசமாக பேசிய பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இதற்காக தற்போதும் சிகிச்சை எடுத்துக்கொண்டு வரும் நிலையில் நடிகை சமந்தாவிற்கு ‘பேமிலி மேன்’ வெப் சீரிஸில் சமந்தாவுடன் நடித்த மனோஜ் பாஜ்பாய் என்ற நடிகர் அறிவுரை ஒன்றை கொடுத்துள்ளார். அதில் சமந்தா கடுமையான உழைப்பாளி என்றும் தற்போது மிகவும் வலி ஏற்படுத்தக்கூடிய உடற்பயிற்சிகளை உடனே அவர் நிறுத்தி, எளிமையான உடற்பயிற்சிகளை மட்டும் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மனோஜ் பாஜ்பாய் அறிவுரைவெறித்தனமான வொர்க்கவுட்