நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி கால்நடை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெறும் நீட் தேர்வை எழுத 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்திலிருந்து 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது திமுகவை எதிர்த்து நீட் தேர்வு, நீட்டாக நடக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு நடத்தப்படாது என கூறினர்.

அவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று 5-வது நீட் தேர்வு நடக்கிறது, திமுகவை எதிர்த்து நீட் தேர்வு – நீட்டாக நடக்கிறது. அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த அழுத்தமும் இல்லை. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தான் பிரஷர் உள்ளது என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.