உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் டெல்லியும் ஒன்று. வளர்ந்துவரும் நாகரிகத்தாலும், வாகனங்களின் அதிகரிப்பாலும், தொழிற்சாலைகளின் தொடர் இயக்கத்தாலும், காற்று மாசுபடுவது அதிகரித்து வருகிறது.
அதன்படி சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள AQLI அறிக்கையின்படி, தற்போதைய காற்று மாசு நீடித்தால் டெல்லியில் வாழும் மக்களின் ஆயுட்காலம் 11.9 ஆண்டுகள் குறையும் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 1.3 பில்லியன் மக்கள், WHO நிர்ணயித்த 5 i4g/m3 என்ற பாதுகாப்பான அளவை விட காற்று மாசுபாடு அதிகமாக உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.