இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் ஆதார் சேவை மையங்கள் இயங்கி வரும் நிலையில் ஆதாரில் ஏதாவது அப்டேட் செய்ய வேண்டும் என்றால் ஆதார் சேவை மையத்திற்கு நேரடியாக சென்று ஆதாரை அப்டேட் செய்து கொள்ளலாம். தற்போது நாம் இருக்கும் இடத்தில் அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்தை எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்து பார்க்கலாம்.

இதற்கு முதலில் mAadhaar  என்ற செயலியை பதிவிறக்கம் செய்து 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு ஓடிபி பதிவு செய்தால் அதன் முகப்பு பக்கத்தில் என்ட்ரோல்மென்ட் சென்டர் என்ற ஐகான் இருக்கும். அதனை கிளிக் செய்து more என்ற பிரிவுக்கு சென்றால் லோகெட் என்ரோல்மென்ட் சென்டர் என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்தால் நீங்கள் இருக்கும் இடத்தில் அருகில் உள்ள ஆதார் மையங்களில் பட்டியல் காண்பிக்கப்படும். மேலும் ஆதார் மையங்களின் முகவரி மற்றும் மொபைல் எண் விவரங்களும் அதில் காண்பிக்கப்படும்.