இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மனித பாப்பிலோமா வைரஸ் என்ற தடுப்பூசியை ஆறு முதல் 14 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கர்ப்பப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதால் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.