
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் நிலவின் துருவ பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மட்டும் ஐஐடி தன் பாத் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். மேலும் வட துருவப் பகுதியில் உள்ள நீர் பனியின் அளவு தென் துருவ பகுதியை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் இதன் மூலம் நிலவில் நீர் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது