இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவான திரைப்படம் சப்தம். இந்த படத்தில் நடிகர் ஆதி ரூபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  7ஜி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சிம்ரன், லைலா, லட்சுமிமேனன், ரெடின் கிங்ஸ்லி  உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் வெளியான முதல் நாள் ஒரு கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஆதி அளித்துள்ள பேட்டியில், சினிமாவை பொறுத்தவரை தமிழ், தெலுங்கு என நான் பிரிப்பது கிடையாது.

அமானுஷ்ய விஷயங்கள் நடந்தது. சில தினங்களுக்கு முன்பாக ஹைதராபாத்தில் நான் லைலா, அறிவழகன் பேசிக் கொண்டிருந்தபோது கூட லைட் ஆடிக்கொண்டே இருந்தது. இப்படி பல விஷயங்கள் அடிக்கடி நடந்ததால் ஈசியாக நினைக்க தோன்றுகிறது. கண்ணுக்கு தெரியாத கடவுளை நம்பும்போது பேய் இருக்கலாம் என்று நம்பத் தோன்றுகின்றது. எல்லா படத்தின் கதை பற்றியும் மனைவியுடன் கலந்து பேசி ஆலோசனை செய்வேன். ஆனால் முடிவு நான் எடுப்பதுதான்” என்று கூறியுள்ளார்.