பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதீஷ்குமார் இருக்கிறார். இவர் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி பெண்களுடன் உரையாடும் பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார். அதாவது பெண்களுடன் நேரடியாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டு மாநில அரசு இந்த மகிளா சம்வாத் யாத்திரையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த லாலு பிரசாத் யாதவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நிதீஷ்குமார் பெண்களை உற்று பார்ப்பதற்காக செல்கிறார் என்று கூறினார்.

அவருடைய கருத்து சர்ச்சையாக மாறி உள்ள நிலையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. மேலும் அவர் பெண்களை இழிவுபடுத்தி விட்டதாக அரசியல் கட்சிகள் குற்றசாட்டுகளை தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கட்சியின் பெண் எம்பி பிரியங்கா சதிர்வேதி இது போன்ற ஆபாசமான கருத்துக்களை தவிர்க்கலாம். லாலுவின் சொந்த உறுப்பினர்கள் கூட இது போன்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்கலாம் என்று கூறியுள்ளார்.