தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவரும் தற்போது  மோடியை பிரதமர் ஆக்கும் இரண்டு கிங் மேக்கர்களில் ஒருவருமான பீகார் மாநில முதல்வர் நித்திஷ்குமாரை பாஜக தேசிய துணை தலைவர் திலீப் கோஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதில் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு இருவருமே பல்டி மாமாக்கள். நிதிஷ்குமாரையும் சந்திரபாபு நாயுடுவையும் நம்பினால் அவர்கள் முதுகில் குத்துவிடுவார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார். இவர் பேசிய இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.