
இந்தியாவில் நடைபெறும் டி20 தொடரான ஐபிஎல்-ன் சீசன் 18 மார்ச் 22ஆம் தேதி(நாளை ) 10 அணிகளுடன் தொடங்க உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த தொடரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள்? என்ற கேள்வி தற்போதே எழுந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணியானது தன்னுடைய தொடக்க ஆட்டத்தை வரும் 23ஆம் தேதி(நாளை மறுநாள்) மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. போட்டியை 13 இடங்களிலும் மிக பிரம்மாண்டமாக தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்து நிலையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நாளைய போட்டியின் போது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையமானது ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரம்மாண்டமாக தொடக்க விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் மழையால் போட்டி தடைபடுமா? என்று ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள்.