மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசில நாட்களில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவைகள் மாற்றப்படுவது வழக்கம். அந்தவகையில்  திருச்சி ரயில்வே சந்திப்பு பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில் அறிவித்துள்ளது.

மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில் ஜூலை 24ல் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும், திருச்சி விருத்தாசலம், வேளாங்கண்ணி திருச்சி, கோவை – மயிலாடுதுறை உள்ளிட்ட ரயில்கள் ஜூலை 23,24ஆகிய தேதிகளில் பாதியாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது