மும்பையைச் சேர்ந்தவர் பகவான்(25). இவர் தொண்டை வலி, தலைவலி, உடல் வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பகவான் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பூனையும், நாயும் பகவானை கடித்தது.

ஆனால் அவர் அதற்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளார். இதனால் தான் பகவானின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.