
கோட் திரைப்படத்தில் விஜய் அவர்கள் இனி தமிழ் சினிமாவை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறும் வகையில் துப்பாக்கி ஒன்றை சிவகர்த்திகேயன் அவர்களின் கையில் கொடுத்து துப்பாக்கிய பிடிங்க சிவா என கூறி விட்டுச் செல்வார். அதே போல தமிழ் சினிமாவின் அடுத்த முகமாக சிவகார்த்திகேயன் வலம் வருவார் என்ற நம்பிக்கை அனைவர் மத்தியிலும் இருந்தது. ஆனால் இதே சிவகார்த்திகேயன் சில வருடங்களுக்கு முன்பாக தளபதி விஜய் அவர்களை மோசமாக கலாய்த்துள்ள வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதிலும்,
அவர் குறிப்பாக அவரது அரசியல் பயணம் குறித்து கலாய்த்து உள்ளார். அதில் , நான் வருங்காலத்தில் அரசியலில் வந்து மக்களை சந்தித்து வெற்றி பெற்று முதலமைச்சரானால் அரசு பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை நீக்கி விட்டு எனது பஞ்ச் டயலாக்கை எழுதுவேன் என அவரது குரலிலேயே அவர் அரசியலுக்கு வரமாட்டார் முதலமைச்சர் ஆக மாட்டார் என்பது போல் நக்கல் செய்து பேசியிருப்பார் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram