
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் உட்பட அனைத்து நதிகளையும் இந்தியா நிறுத்தியதோடு இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்களையும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் இந்தியர்கள் ஒவ்வொருவரும் வலியுறுத்திய நிலையில் நேற்று நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் இடங்களை குறிவைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. அதன்படி லஸ்கர் இ தொய்பா அமைப்பு செயல்படும் பர்னாலா, முஷாஃபாபாரத், ஜெய்ஸ் இ முகமது அமைப்பு செயல்படும் பஹவல்பூர், ஹிஸ்புல் முகாஜிதீன் தீவிரவாத அமைப்பின் கோட்லி, சிகல் கோட் ஆகிய பகுதிகளில் இந்திய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்டதோடு அப்பாவி பொதுமக்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து எந்த தாக்குதலும் நடைபெறவில்லை என்று ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.
“प्रहाराय सन्निहिताः, जयाय प्रशिक्षिताः”
Ready to Strike, Trained to Win.#IndianArmy pic.twitter.com/M9CA9dv1Xx— ADG PI – INDIAN ARMY (@adgpi) May 6, 2025
இந்நிலையில் இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாக இந்திய ஆர்மி தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டது. அதாவது தயார் நிலையில் இந்திய ராணுவம் இருப்பதாக பதிவு வெளியிட்டு பாகிஸ்தானை மறைமுகமாக எச்சரித்துள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவம் நீதி கிடைத்துவிட்டது ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.