இட ஒதுக்கீடு கொடுப்பதாக கூறி இரு கட்சிகளும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். நீதிமன்றம் தீர்ப்பு அளித்து 2 ஆண்டுகள் ஆகியும் தரவுகள் சேகரிப்பதாக இன்னும் கூறுகிறார்கள். நான் முதலமைச்சராக இருந்தால் ஒரு மணி நேரத்தில் இட ஒதுக்கீட்டுக்காக கையெழுத்து போடுவேன். திமுக, அதிமுக இல்லாத ஆட்சி 2026-ல் பாமக தலைமையில் அமையும்.

திமுக ஆட்சிக்கு வரும்போது 4.5 லட்சம் கோடி கடன் இருந்தது. 3 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் சேர்த்து 13 லட்சம் கோடி கடனில் தமிழ்நாடு தத்தளித்து வருகிறது என விக்கிரவாண்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.