சீனாவின் ஜியான்சு மாகாணத்தில் வுக்சி நகரில் இருக்கும் கல்வி நிறுவனத்தில் 21 வயது மாணவர் படித்து வருகிறார். அந்த மாணவர் திடீரென கோபத்தில் கல்லூரி வளாகத்தில் இருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனால் எட்டு பேர் உயிரிழந்தனர். 17 காயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அனைவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய மாணவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த மாணவர் தனது ஆண்டு தேர்வில் தோல்வியடைந்து பட்டம் பெற தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் கல்லூரி வளாகத்தில் இருந்தவர்களின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.