இந்தியாவின் புகழ்பெற்ற பாடகி ஸ்ரேயா கோஷல் இந்தி மொழியை தாய்மொழியாக கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என எந்த மொழியில் பாட வேண்டும் என்றாலும் எல்லாவற்றையும் அசால்டாக பாடி முடிப்பவர். தற்போது இவர் சினிமாவில் பாடலை பாடுவதை தாண்டி இசைக்கச்சேரிகளிலும் அதிகமாக பாடல் பாடி வருகிறார்.  இந்த நிலையில் இவருடைய எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு என்னுடைய எக்ஸ் பக்கம் கடந்த 13ம் தேதி முதல் முடக்கப்பட்டுள்ளது.

அதை சரி செய்வதற்கு எக்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டேன். ஆனால் எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. என்னுடைய கணக்கை டெலிட் செய்யவோ, உள்நுழையவோ  முடியவில்லை. எனவே தயவு செய்து எக்ஸ் பக்கத்தில் இருந்து வரும் எந்த லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். அதோடு அந்த பக்கத்தில் வரக்கூடிய எந்த தகவலையும் நம்ப வேண்டாம். அவ்வாறு வருபவை அனைத்தும் போலி மற்றும் மோசடி செய்திகளாக இருக்கலாம். கணக்கு மீட்க்கப்பட்ட பிறகு உடனடியாக வீடியோ மூலம் தகவல் கொடுக்கிறேன்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.