
பிரபல நடிகரான ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெயம் ரவி ஆர்த்தி பிரிவு பூதாகரமாக வெடித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெயம் ரவி தனது மனைவி மற்றும் மாமியாரை குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டார். நடிகர் ஜெயம் ரவியின் மாமியாரும், திரைப்பட தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் தற்போது பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.
கடந்த 25 வருடங்களாக திரைப்படத்துறையில் ஒரு தயாரிப்பாளராக இருந்து வருகிறேன் ஒரு பெண்ணாக இத்தனை காலம் இத்துறையில் நீடித்திருப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது உங்களுக்குத் தெரியும் இத்தனை ஆண்டுகளில் பட வெளியீட்டின் போது அந்தப் படம் சம்பந்தமில்லாமல் வேறு எதற்காகவும் நான் மீடியா முன்பு வந்தது இல்லை. இப்பொழுது முதல்முறையாக என்னைப் பற்றி எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன். இதோ முழு அறிக்கை…