
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய் உடன் சேர்ந்து “பீஸ்ட்” என்ற திரைப்படத்தில் தீவிரவாதியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படத்தில் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் நடித்துள்ளார். அதோடு தெலுங்கிலும் படம் நடித்து வருகிறார்.
இவருக்கு கவிதா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அனால் இவர்களிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது. இந்நிலையில் இவருக்கும் தோழியான தனுஜா என்ற மாடலுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இதுதொடர்பான புகைப்படங்களை இருவரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். ஆனால் சமீபத்தில் அதை இருவரும் நீக்கிவிட்டனர். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்தி வெளியானது.
ஷைன் டாம் சாக்கோ சமீபத்தில் பங்கேற்ற பெட்டியில் இதனை உறுதி செய்தார். இப்போது சிங்களாகத்தான் இருக்கிறேன். அதிக அன்பு வைத்திருந்தாலும் அந்த உறவை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு உறவை பேணுவதற்கு விரும்பினால் மட்டும் போதாது.
இருவருமே இந்த புரிதலுக்கு வந்தோம், தற்போது டேட்டிங் ஆப்பை பயன்படுத்தி வருகிறேன். அதில் இருப்பது நான்தான் என்பதை நம்ப மறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். தனுஜா இதைப்பற்றி கூறும் போது, அவரை நேசித்தது போல வேறு யாரையும் நான் நேசித்தது இல்லை. சில விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாது, அதனால் இது பற்றி பேச விரும்பவில்லை என்று கூறினார்.