
பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகராக இருப்பவர் சல்மான் கான். இவருடைய முன்னாள் காதலி சோமி அலி சல்மான் கான் தன்னை பல விதங்களில் துன்புறுத்தியதாக அடிக்கடி கூறி வருவார். அந்த வகையில் தற்போதும் இன்ஸ்டாகிராமில் சல்மான் கானால் தான் அனுபவித்த துன்பங்கள் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில் சல்மான் கானை தான் காதலித்த 8 ஆண்டுகள் என்னுடைய வாழ்வின் மோசமான வருடங்கள். அவர் என்னை பலரது மத்தியிலும் அசிங்கப்படுத்துவதோடு பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எப்போதும் என்னை துன்புறுத்துவார். அவர் என்னை காதலி என்று ஏற்றுக் கொள்வதற்கே பல ஆண்டுகள் ஆனது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram