
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் அசோக் கெம்கா. 1991-ஆம் ஆண்டு ஐஏஎஸ்-ஆக தனது பயணத்தை ஆரம்பித்த அசோக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போக்குவரத்து துறை கூடுதல் துணை செயலாளரராக நியமிக்கப்பட்டார். அசோக் பல துணிச்சலான முடிவுகளை எடுத்தவர். கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதெராவுடன் தொடர்புடைய குருகிராமில் உள்ள ஒரு நில ஒப்பந்தத்தை அசோக் ரத்து செய்துள்ளார்.
நில ஒப்பந்தத்தை ரத்து செய்ய அசோக் உத்தரவு பிறப்பித்த போது அந்த நேரத்தில் ஹரியானாவில் காங்கிரஸ் அரசு இருந்தது. பூபேந்திர சிங் ஹூடா முதலமைச்சராக பதவி வகித்தார். பிரதமர் மோடி தேர்தல் பேரணிகளிலும் நில ஒப்பந்தம் குறித்து விமர்சனம் செய்தார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு அசோக் துணிச்சலாக செயல்பட்டுள்ளார். அவர் பதவி வகித்த நாள் முதல் இதுவரை 57 முறை அசோக் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் போக்குவரத்து துறையில் நியமிக்கப்பட்டார்.
2014 ஆம் ஆண்டு போக்குவரத்து ஆணையர் ஆணையராக பதவி வகித்தார். அப்போது பெரிய வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ்களை வழங்க அசோக் மறுத்துவிட்டார். இதனால் லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2024-ஆம் ஆண்டு அசோக் முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில் தன்னை விஜிலென்ஸ் துறைக்கு பணியமர்த்துமாறு கூறினார். தனது சேவை முடிவில் ஊழலுக்கு எதிராக உண்மையான போராட்டத்தை நடத்துவதாக நான் உறுதியளிக்கிறேன் என கூறியிருந்தார். நாளை அசோக் பணி ஓய்வு பெற உள்ளார். இதனை முன்னிட்டு அரியானா ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் இன்று மாலை சண்டிகரில் பிரியாவிடை விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்