
சென்னை மாவட்டம் நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு ஹரிஹரன் தள்ளுவண்டி கடையில் டிபன் சாப்பிட்டுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
சாப்பிட்டு முடித்த பிறகு ஹரிஹரன் பணம் கொடுத்துள்ளார். அப்போது மனோஜ் குமார் தனக்கும் சேர்த்து பணம் கொடுக்குமாறு கூறியதால் ஹரிஹரன் நீங்க யார் என்று எனக்கு தெரியாது.
எதற்காக நீங்க சாப்பிடுவதற்கு நான் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த மனோஜ் குமார் ஹரிஹரனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றார்.
இதில் காயமடைந்த ஹரிஹரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மனோஜ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.