சமூக வலைத்தளங்களில் எழுதுவோர் தனக்கு மூன்று, நான்கு திருமணங்கள் செய்து வைத்துவிட்டதாக நடிகை அஞ்சலி நகைச்சுவையாக கூறியுள்ளார். திருமணம் குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன். ஆனால், அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இப்போது நான் சினிமாவில் பிசியாக இருக்கிறேன்.

இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. நிச்சயமாக எனக்கு திருமணம் நடக்கும். ஆனால், இப்போது இல்லை. EMI-கள் நிறைய இருப்பதால், திருமணம் செய்யும் எண்ணம் தற்போது இல்லை” என்று கூறினார்.