
டெல்லியில் 5600 கோடி மதிப்பில் ஆன போதை பொருட்கள் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட நிலையில் போதைப் பொருள் கும்பலும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் துஷார் கோயல் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் ஆர்டிஐ பிரிவின் தலைவராக செயல்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டினை காங்கிரஸ் முற்றிலும் மறுத்துள்ள நிலையில் இது போதைப் பொருள் கடத்தல் என்பதை தாண்டிலும் டெல்லியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் ரீதியான பிரச்சினை உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த போதை பொருள் மூலம் விற்பனை செய்யப்பட்ட பணம் ஹரியானா தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு உதவியதா என்று பாஜக கேள்வி எழுப்பியதோடு இந்த விவகாரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை காங்கிரஸ் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர் பதவியில் கோயல் வகித்தார். மேலும் போதை பொருள் விற்பனை குறித்து காங்கிரஸ் மீது பாஜக குற்றம் சாட்டியுள்ள நிலையில் அதனை காங்கிரஸ் மருத்து வருவது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.