
மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த 19ஆம் தேதி சொகுசு காரை 17 வயது சிறுவன் மது போதையில் காரை ஓட்டியதில் இரு ஐடி ஊழியர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் மது போதையில் காரை ஓட்டிய 17 வயது மகனின் ரத்தத்தை மருத்துவமனையில் மாற்றிய தாய் ஷிவானி அகர்வாலை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.
மகனின் ரத்தத்திற்கு பதிலாக தன்னுடைய ரத்தத்தை மாற்றி மகன் மதுபோதையில் இல்லை என்று மோசடியாக சான்று பெற்றுள்ளார். இந்த விவகாரத்தில் இரண்டு மருத்துவர்கள் ஏற்கனவே கைதாகி உள்ளனர்.