ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தகவல்படி அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் 3வது ஆண்டாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2022-23 நிதியாண்டில், RBI தகவலின் படி, முதல் 11 மாதங்களில் தமிழகம் 68,000 கோடி கடன் வாங்கியுள்ளது. இது 2020-21 (287,977 கோடி) மற்றும் 2021-22 நிதி ஆண்டில் (287,000 கோடி) வாங்கிய கடனைவிட குறைவு என்றாலும், நடப்பு ஆண்டில் தமிழகமே அதிக கடன் பெற்றுள்ளது. அடுத்தபடியாக ஆந்திரா (251,860 கோடி), மகாராஷ்டிரா (250,000 கோடி) உள்ளது.

அதிக கடன் வாங்கிய 10 மாநிலங்களை ஆய்வுக்கு உட்படுத்திய போது கடந்த நிதி ஆண்டில் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கடன் வாங்குவதை அதிக அளவில் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. சொத்து வரி மற்றும் வரியற்ற வருவாய் ஆகியவற்றின் அதிகரிப்பு காரணமாக கடன் வாங்குவதை உத்தரபிரதேச மாநிலம் குறைத்துள்ளதாகவும் அதே நேரத்தில் ஆந்திர பிரதேசம், அரியானா, குஜராத் ஆகியவை 2021-22 நிதியாண்டில் வாங்கிய கடனை விட 2022-23 முதல் 11 மாதங்களில் அதிக கடன் வாங்கி உள்ளது.