இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதன் பிறகு 3 விதமான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடும் முகமது ஷமி தற்போது காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகி ஓய்வில் இருக்கிறார். இவருடைய முன்னாள் மனைவி ஹசின் ஜகான்.

இவர் தன்னை முகமது வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும் , பாகிஸ்தான் பெண்ணிடம் பணம் வாங்கிக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் பரபரப்பு புகாரினை‌ தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தன்னுடைய மனைவியிடம் இருந்து ஷமி விவாகரத்து பெற்றுக்கொண்டார். ஆனால் இன்றளவும் அவருக்கு ஜீவனாம்சம் கொடுத்து வருகிறார். இந்நிலையில் முகமது ஷமியின் நண்பர் உமேஷ் குமார் என்பவர் தற்போது ஒரு பேட்டியில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை கூறியுள்ளார். அதாவது ஷமியின் முன்னாள் மனைவி சூதாட்டப் புகாரில் ஈடுபட்டதாக அப்போது குற்றம் சாட்டியதால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.

அவர் என்னால் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் என் நாட்டிற்கு துரோகம் செய்கிறேன் என்று சொன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்று நண்பரிடம் கூறி கதறியுள்ளார். அந்த சமயத்தில் ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் திடீரென அவர்கள் தங்கி இருந்த மாடியில் இருந்து குதித்து ஷமி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்‌.

அவர்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 19-வது மாடியில் தங்கி இருந்த நிலையில் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள நினைத்தார். அன்றைய தினம் இரவு அவருக்கு நீண்ட நேர இரவாக இருந்தது. ஆனால் காவல்துறையினர் அறிக்கையில் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிய வந்ததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மேலும் உலக கோப்பையை வென்றபோது கூட அவ்வளவு மகிழ்ச்சி அடையாத ஷமி தன் மீது குற்றச்சாட்டு இல்லை என்பது தெரிய வந்ததால் மிகவும் சந்தோஷப்பட்டார் என்று கூறியுள்ளார்.