ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஏற்பட்டதில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு சிலர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே விபத்து நடந்த உடனே தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசாவிற்கு விரைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒடிசாவிற்கு சென்ற அமைச்சர் உதயநிதிக்கு கூலிங் கிளாஸ் அவசியமா? என Ex அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த ட்வீட்டில், ‘நாடே மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளது! இன்னும் கண்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நம் கண்களை மூடவிடாமல் செய்கின்றன! இன்னும் நம் காதுகளில் மரண ஓலங்கள் ஒலித்துகொண்டிருக்கிறது! இத்தனை இடர்களுக்கு இடையிலும் ஆய்வுக்கு செல்லும்போது கூலிங் கிளாஸ் அவசியமா’ என கேட்டுள்ளார்.