
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலே அடுத்து மத்தியில் ஆட்சி அமைக்க போவது யார் என்பதை தீர்மானிக்கும் என்பதால் இந்த வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.