நாடு முழுவதும் கடந்த வருடம் நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்ததாக மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் 65 லட்சம் மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் தோல்வி அடைந்துள்ளனர். இந்நிலையில் State board-ல் படித்த 16 சதவீதம் மாணவர்களும், Central board-ல் படித்த 6 சதவீத மாணவர்களும் 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை.

இதேபோன்று 12-ம் வகுப்பில் State board-ல் 18 சதவீத மாணவர்களும், Central board-ல் 16 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெறவில்லை. மேலும் நாட்டில் 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மத்திய பிரதேச மாநிலமும், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் பட்டியலில் பீகார் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.