நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நியமிக்கப்படுவார் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். அதாவது செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா அணியைச் சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் காங்கிரஸ் கட்சியை 150 தொகுதிகளில் வென்றால் ராகுல் காந்தி பிரதமராக நியமிக்கப்படுவார் என்று கூறியுள்ளார்.

மேலும் தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலே இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்றும் ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்றும் மக்களும் இதைத்தான் விரும்புவார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக கார்கே இருக்கும் நிலையில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று சஞ்சய் ராவத்  கூறியது பேசும் பொருளாகியுள்ளது.