ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றியை இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு குடும்பம் இந்தியாவின் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய காணொலி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் என்றாலே இரு நாட்டு ரசிகர்களுக்கும் அது ஒரு உணர்ச்சிகரமான மற்றும் பதற்றமான சூழலாகவே இருக்கும். இத்தகைய சூழலில், பாகிஸ்தானில் உள்ள ஒரு குடும்பத்தினர், இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதற்காகத் தங்கள் வீட்டில் கேக் வெட்டி, கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நெகிழ்ச்சியான தருணம் அடங்கிய காணொலி, சமூக வலைதளங்களில் சில மணி நேரங்களிலேயே வைரலாகியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Indian (@latestindians)

இந்தக் காணொலிக்கு இணையத்தில் பலதரப்பட்ட கருத்துகள் பதிவாகி வருகின்றன. “கிரிக்கெட்டிற்கு மக்களை இணைக்கும் அற்புதமான ஆற்றல் இருக்கிறது” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், “எல்லைகள் பிரித்தாலும், விளையாட்டு மனப்பான்மை மக்களை ஒன்றிணைக்கிறது”, “இது மிகவும் அழகான மற்றும் நெகிழ்ச்சியான தருணம்” என அந்தப் பாகிஸ்தான் குடும்பத்தினரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.