தலைநகர் சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலம் சித்தூர் அமைந்துள்ளது. இங்கு நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் போதிய அளவு பாதுகாப்பு இல்லாததால் அடுத்தடுத்து பல உயிர்கள் பறிபோனது. இதனால் கடந்த 2018-ம் ஆண்டு நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சியை ஆந்திர மாநில அரசு மூடியது. தற்போது போதிய அளவு பாதுகாப்பு வசதிகள் மற்றும் முன்னேற்பேடு வசதிகள் போன்றவைகள் வனத்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு தற்போது நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சியை ஆந்திர மாநில அரசு திறந்துள்ளது.

இதன் காரணமாக தற்போது சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீர்வீழ்ச்சிக்கு செல்கின்றனர். அங்கிருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் அவை சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. மேலும் நாகலாபுரத்தில் மொத்தம் 3 நீர்வீழ்ச்சிகள் இருக்கும் நிலையில், ஒரு நீர்வீழ்ச்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 நீர்வீழ்ச்சிகளும் படிப்படியாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சி மீண்டும் திறக்கப்பட்டது சென்னை வாசிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.