உலகம் முழுவதும் புத்தாண்டு பிறந்து விட்டது மக்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்கிறார்கள். புத்தாண்டு பண்டிகையை தமிழகத்திலும் மக்கள் சிறப்பான முறையில் கொண்டாடி வருகிறார்கள். அதன் பிறகு புத்தாண்டு பண்டிகைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனால் கைவிட்டு விடுவான். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.‌ welcome 2025 என்று பதிவிட்டுள்ளார். மேலும் பாட்ஷா பட பாணியில் நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.