தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவருக்கு இணையாக தமிழ் சினிமாவில் இன்று வரை யாருமே இல்லை என்று தான் கூற வேண்டும். தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்ட நடித்துள்ள இவ்வாறு சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகின்ற. இதனைத் தொடர்ந்து நானும் ரௌடி தான் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் வளரும் வரை படிப்படியாக வீட்டில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் விக்னேஷ் சிவன் இணையத்தில் பதிவிட்டு வரும் நிலையில் தற்போது குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படத்தை எடுத்து கார்ட்டூன் போன்று ஒரு புகைப்படம் செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த இணையவாசிகள் ஏதாவது புது வியாபாரத்தின் விளம்பரமா என கூறி கலாய்த்து வருகிறார்கள்.