தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மலையாள தொலைக்காட்சியில் சமயம் என்ற பேஷன் மற்றும் லைப் ஸ்டைல் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வந்துள்ளார். இதன் மூலமாகத்தான் இவருக்கு ஹீரோயின் ஆக ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு முன்னணி ஹீரோயினாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு மலையாளத்தில் சந்தான கோபாலம். கிருஷ்ண கிருபா சாகரம் போன்ற சீரியல்களில்  குழந்தை நச்சத்திரமாக நடித்து வந்துள்ளார். அதன் பிறகு பேபி ஜான் படத்தின் மூலமாக பாலிவுட் ஹீரோயினாக அறிமுகமானார்.

பல காதல் திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மீறினால் தாகூர். முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உள்ளார். இவர் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பு ஹிந்தியில் கும்கும் பாக்கியா, அர்ஜுன் உட்பட பல சீரியல்களின் நடித்துள்ளார். நித்தியா  மேனன் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பாக  இந்தி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் பிறகு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பட்டத்தை வென்றார்.